ஜனாதிபதி எதற்காக சந்திக்கின்றார்? : வெளிநாட்டு ராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்காகவா?

Published By: Digital Desk 7

06 Sep, 2017 | 04:07 PM
image

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று  ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 

இவ்வூடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிகின்றோம்.

ஜனாதிபதி எதற்காக சந்திக்கின்றார்? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு நட்ட ஈடு வழங்க சந்திக்கின்றாரா? வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து எம்மை சந்தித்த ஜனாதிபதி இன்றுவரை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பு எதற்காக? வெளிநாட்டு ராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்காகவா?,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என நாம் இங்கு உள்ள நிலையில், இவர்கள் அழைத்து செல்வது யாரை? இந்த ஊடக சந்திப்பின் மூலம் நாம் பகிரங்கமாக தெரியப்படுத்துவது யாதெனில்,

நாளை இடம்பெறும் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல, அவர்கள் அழைத்து செல்பவர்கள் எப்படியானவர்கள் என்பது எமக்கு தெரியாது" , என தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59