தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கண்டி,  அலவத்துகொடை நகர பூஜாபிட்டிய வீதியில் யாலுகாமம் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் கற்பாறை  ஒன்றுபோக்குவரத்துப் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.

இதனால்  வாகனப் போக்குவரத்திற்கு  தடைப்பட்டது, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பொதுமக்களின் உதவியுடன்  கற் பாறையின்  ஒரு பகுதியை  அகற்றி தடைப்பட்ட போக்குவரத்தை சீர் செய்தனர்.  

நாட்டில் பல பாகங்களிலும் பருவ மழை பொழிய ஆரம்பித்துள்ளதால்  மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில்  மண் சரிவு  மற்றும் பாறைகள் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் அதே  பாதையில் பிரிதொரு இடத்தில் வீழ்ந்திருந்த கற் பாறையை அலவத்துகொடை பொலிஸார்  பிரதேச மக்களின் உதவியுடன் அகற்றியுள்ளனர்.