ஹோமாகம, கெந்தலந்த பகுதியில் இராணுவ ட்ரக் வண்டி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் 17 இராணுவ வீரர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிட்டிபன பகுதியிலிருந்து ஹோமாகம நோக்கி ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றி வந்த பஸ்ஸிற்கு பின்னால் அதே திசையை நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டி மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் 17 இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை என ஹோமாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.