ஊங்கம, லுனம எனும் பகுதியில் இன்று பகல் வேன் ஒன்று மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

சிறு குழந்தைகள் உட்பட பதின்மூவர் அடங்கிய வேன் ஒன்று பத்தேகமவிலிருந்து எம்பிலிபிடி நோக்கி சென்ற வழியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மின் கம்பத்துடன் மோதுண்ட வேன் குடைசாய்ந்ததில் சிறு பிள்ளைகள் இருவரும் வயது வந்த ஆண்கள் இருவரும் பெண் ஒருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  ஊங்கம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.