தொடரும் சீரற்ற காலநிலை : கடுமையான வெள்ளம் - இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Published By: Robert

05 Sep, 2017 | 02:46 PM
image

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சப்ரகமுவ, ஊவா, மாகாணங்களுடன் களுத்துறை, காலி, மாத்தறை, கொழும்பு, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் 100  மில்லி மீட்டர் மழையை எதிர்பார்ப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காலி -  பத்தேகம,  உடுகம, நாகொட உள்ளிட்ட வீதிகள் உட்பட ஏராளமான வீதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

காலியை அண்மித்த மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்தில் கடுமையான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அளுத்கம - கந்தவிகாரையைச் சுற்றியுள்ள வீதிகள், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

மாது கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதனை சுற்றிவுள்ள பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகொட பிரதேசத்தில் மாத்திரம் 200 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண் சரியக்கூடிய இடங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. காலி, நுவரெலிய ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பொலன்னறுவை – கதுருவெல பகுதியில் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அப்பகுதியில் மின்சாரம் விநியோகம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17