யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவக் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த ஊரணி கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பகுதி மற்றும் பாடசாலையுடன் இணைந்த காணியும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பாடசாலையையும் பாடசாலையுடன் இணைந்த காணியையும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனிடம் கையளித்தார்.

குறித்த காணி விடுவிப்பு நிகழ்வானது வலிகாமம் பாடசாலை வளாகத்தில் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் பாடசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைப்பெற்றது.