தமிழத் திரைப்­பட நடிகர் ரஜி­னி­காந்­துக்கு நாட்டின் உய­ரிய கௌர­வங்­களில் ஒன்­றான பத்ம விபூஷண் விருதை மத்­திய அரசு வழங்க உள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

நாட்டின் குடி­மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் உய­ரிய விரு­தான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்­மஸ்ரீ விரு­துகள் பெறுவோர் விபரம் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது. வாழும் கலை குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி­சங்­க­ருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 2016ஆம் ஆண்­டுக்­கான பத்ம விரு­து­களில், ரிலையன்ஸ் நிறு­வனர் மறைந்த திருபாய் அம்­பா­னி பத்ம விபூஷண் விரு­துக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.

விளை­யாட்டுத் துறையில், பேட்மி­ண்டன் வீராங்­கனை சாய்னா நேவல், டென்னிஸ் நட்­சத்­திரம் சானியா மிர்சா ஆகி­யோர் பத்ம பூஷண் விருது பெறு­கின்­றனர்.இது­த­விர, கணக்கு மற்றும் தணிக்கைத் துறை முன்னாள் தலைவர் வினோத் ராய், நடிகர் அனுபம் கேர், பாடகர் உதித் நாரா­யணன் ஆகி­யோ­ருக்கும் பத்ம பூஷண் விருது வழங்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வுக்­கான முன்னாள் அமெ­ரிக்க தூதர் ராபர்ட் பிளாக்­வில்­லுக்கு பத்­ம­ பூஷண் விருது வழங்­கப்­ப­டு­கி­றது. மூத்த வழக்­க­றிஞர் உஜ்வால் நிகாம், இந்தி திரைப்­பட நடி­கர்கள் அஜய் தேவ்கன், பிரி­யங்கா சோப்ரா, பாகு­பலி திரைப்­பட இயக்­குநர் எஸ்.எஸ்.ராஜ­மெ­ளலி, போஜ்­பூரி மொழிப் பாடகர் ஹுய் லான் சாங் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.