நான்கு மாவட்­டங்­க­ளுக்­கான மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை நீடிப்பு.!

Published By: Robert

05 Sep, 2017 | 08:33 AM
image

Image result for மண்சரிவு எச்சரிக்கை virakesai

நாட்டில் தொடர்ச்­சி­யாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நான்கு மாவட்­டங்களுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாயஎச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்பட்­டி­ருப்­ ப­தாக அனர்த்த முtகா­மைத்­துவ மத்­திய நிலை யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. களுத்­துறை, கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளுக்கே குறித்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அங்­கி­ருக்கும் மக்­களை  பாது­காப்­பான இடங்­களில் குடி­யே­று­மாறும்  திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது.

இது தொடர்­பில்­அ­னர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் விடுத்­துள்ள விசேட அறிக்­கை­யொன்றில்   மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண கால­நிலை மாற்­றத்தால் பெரும்­பா­லான பகு­தி­களில் தொடர்ந்தும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கி­வ­ரு­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில் கடந்த 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள்100 மில்லி மீற்றர் மழை­வீழ்ச்சி நாட­ளா­விய ரீதியில் பதி­வா­கி­யுள்­ளது. குறித்த மழை­வீழ்ச்­சி­யா­னது எதிர்­வரும் நாட்­களில் மேலும் அதி­க­ரிக்­க­கூடும் என்­பதால் களுத்­துறை, கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்ட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்­கை­யா­னது தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக களுத்­துறை மாவட்­டத்தின் அக­ல­வத்தை, புளத்­சிங்­கள, பாலிந்­த­நு­வர ஆகிய பிர­தேச சபை­க­ளுக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளுக்கும், கேகாலை மாவட்­டத்தின் யட்­டி­யாந்­தோட்டை பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்கும் மண்­ச­ரிவு   அபாய   முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் குரு­விட்ட பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்கும், காலி மாவட்­டத்தின் நெலுவ பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்­குமே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் தேசிய கட்­டிட ஆய்­வுகள் நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

 அறி­வித்­த­லா­னது நேற்று திங்­கட்­கி­ழமை இரவு 10 மணி­முதல் இன்று செவ்­வாய்க்­கி­ழமை இரவு 10 மணி­வ­ரை­யான  24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்   

 மண்­ச­ரிவு ஏற்­படும் அபாய வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட பகு­தி­களில் தற்­போது நிலவும் மழை கால­நிலை தொடர்ந்தால் நிலச்­ச­ரிவு, பாறைகள் இடிந்து விழுதல், நிலத்­தாழ்வு உள்­ளிட்ட அனர்த்­தங்கள் ஏற்­படும் வாய்ப்­புள்­ளது.

எனவே அங்கு மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களின் போது மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்டும்.  

 மரங்கள் அல்­லது கம்­பங்கள் முறிந்­து­விழும் அபாயம், நிலம், சுவர், அல்­லது கட்­ட­டங்­களில் ஏதேனும் வெடிப்­புக்கள் ஏற்­ப­டுதல், நிலத்­தி­லி­ருந்து திடி­ரென நீருற்­றுக்கள் மற்றும் சேற்று நீர் ஊடுறுதல் உள்ளிட்ட மண்சரிவு அபாய அறிகுறிகள் காணப்படுமாயின் மக்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறவேண்டும்.  

அத்துடன் மேக மூட்டத்துடனான காலநிலை தொடரும் சந்தர்ப்பங்களின் போது குறித்த பிரதேசங்களுக்கு பயணிக்கும் வாகனசாரதிகளும் முன் எச்சரிக்கையான முறையில்  நடந்துகொள்ளவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41