வட மாகாண சபையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் வட மாகாண சபையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வட மாகாண சபையில் கடந்த 4 வருடங்களில் முதற்தடவையாக கோரரமில்லாத நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வட மாகாண சபையின் 104 ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவரசாவினால் கடந்த அமர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வட மாகாண முதலமைச்சர் இன்று பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.