அட்டன் - நுவரெலியா பிரதான வீதீயின் நானுஓயா  பகுதியில் பால் கொண்டு சென்ற பௌசர் ஒன்று வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானதில் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

அம்பேவலயிலிருந்து அட்டன் நோக்கிச்சென்ற பால் கொண்டு சென்ற பௌசரே நானுஓயா ரதல்ல குருக்கு வீதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பௌசரில் ஏற்பட்ட திடீர் கோளாரினாலே விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சீரற்றகால நிலை காரணமாக பௌசர் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி வித்துக்குள்ளானதாகவும் இதில் தெய்வாதீனமாக சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.