நாடளாவிய  ரீதியில் இன்று பொது சுகாதார வைத்தியர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகர சபையில் பணிபுரிந்த சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் ஐந்து பேரை சுகாதாரத்துறை செயலாளர் தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமது கோரிக்கைக்கு அதிகாரிகள் முறையான தீர்வு வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 நுவரெலியா,  ஹட்டன், லிந்துலை, கொட்டகலை, டயகம, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற இடங்களிலும் வைத்தியர்கள்  பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.