நாட்டின் பல பகு­தி­களில் எதிர்­வரும் நாட்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யங்கள் இருப்­ப­தாக  வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது.

இது தொடர்பில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது, 

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் தற்­போது பாரிய  மழை­வீழ்ச்சி பதி­வா­கி­வ­ரு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் பெரும்­பா­லான பகு­தி­களில் 75 மில்லி மீற்ற­ருக்கும் அதி­க­மான மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்­றது.

மேலும்  தொடர்ச்­சி­யாக மழை­பெய்து வரு­வதால் இன்று மற்றும் நாளை 100 மில்­லி­மீற்ற­ருக்கும் அதி­க­மாக கடும் மழை­வீழ்ச்சி பதி­வாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக  மேல், மத்­திய, வடக்கு, மற்றும் சப்­ர­க­முவ ஆகிய மாகா­ணங்­களில் 100 மில்லி மீற்ற­ருக்கும் அதி­க­மான மழை வீழ்ச்சி பதி­வாகும்.  அச்­சந்­தர்ப்­பங்­களில் இடி­யுடன் கூடிய கடு­மை­யாக மழை வீழ்ச்சி கிடைக்கும். அதன்­போது குறித்த பகு­தி­களில் பலத்த காற்று வீசக்­கூடும்.

இந்­நி­லையில்  ஊவா ­மா­கா­ணத்தில்  மணிக்கு சுமார் 75   மில்­லி­மீற்றர் கன­மழை பெய்­யக்­கூடும். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் சில இடங்­களில் பிற்­பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­யக்­கூடும்.

இடி­யுடன் கூடிய மழை பொழியும் சந்­தர்ப்­பங்­களில் தற்­கா­லி­க­மாக பலத்த காற்றும், மின்னல் தாக்­கங்­களும் ஏற்­ப­டக்­­கூடும். இந்­நே­ரங்­களில் பொது­மக்கள் தொலைபேசி மற்றும் மின்னியல் சாதனங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் செயற்படுமாறும் வளிமண்டல திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.