தேசிய அர­சாங்கம் தொடர்பில் டிசம்­பரில் தீர்க்­க­மான தீர்­மானம்?

Published By: Priyatharshan

04 Sep, 2017 | 10:33 AM
image

நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தில் அங்கம்  வகிப்­பதா இல்­லையா என்­பது தொடர்பில்  எதிர்­வரும் டிசம்பர் மாதம் தீர்­மானம் எடுக்­க­வேண்டும் என்­பதில்  ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மிகவும் உறு­தி­யாக இருப்­ப­தாக  கட்சி மட்டத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

2020 ஆம் ஆண்டு வரை தேசிய நல்­லி­ணக்க அர­சாங்­கத்தை  தொட­ர­வேண்டும் என்­பதில்  ஜனா­தி­பதி  உறு­தி­யாக இருந்­தாலும்   அர­சாங்­கத்தில்  அங்கம் வகிக்கும் சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் அதி­ருப்­தி­யு­ட­னேயே இருப்­ப­தாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக டிசம்பர் மாத­ம­ளவில்  தேசிய அர­சாங்கம் தொடர்பில் ஒரு தீர்க்­க­மான முடிவு எடுக்­க­வேண்டும் என்­பதில் சுந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் உறு­தி­யாக இருக்­கின்­றனர். 

புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் செயற்­பாட்­டிலும்  இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தாக   தெரி­ய­வ­ரு­கி­றது.  விசே­ட­மாக  புதிய அர­சி­ய­ல­மைப்பை  உரு­வாக்கி  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு உட்­ப­டுத்த வேண்­டு­மென  ஐக்­கிய தேசி­யக்­கட்சி தெரி­வித்­துள்ள நிலையில்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தை  மேற்­கொண்டு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்­றினால் போது­மா­னது என  தெரி­வித்து வரு­கின்­றது. 

அது­மட்­டு­மன்றி தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்­பிலும் இரண்டு கட்­சி­க­ளு­மி­டையில் முரண்­பா­டுகள் தோன்­றி­யுள்­ளன. மாகா­ண­சபைத் தேர்­தல்­களை  ஒரே தினத்தில் நடத்­த­வேண்டும் என்ற நோக்­கத்தில் 20 ஆவது திருத்தச் சட்டம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

எனினும்  20 ஆவது திருத்த சட்­ட­மாக தேர்தல் முறை மாற்­றமே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று சுதந்­தி­ரக்­கட்சி கூறி­வ­ரு­கின்­றது. அதா­வது  தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் ஊடாக  மாகா­ண­சபைத் தேர்­தல்கள் ஒரே தினத்தில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்ற நோக்கம் இருந்­தாலும் அத­னூ­டாக மாகா­ண­சபைத் தேர்­தல்கள்  தாம­திக்­கப்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது என சுதந்­தி­ரக்­கட்சி கூறி­வ­ரு­கி­றது.

இந்­நி­லை­யி­லேயே தேசிய அர­சாங்கம் தொடர்பில் டிசம்பர் மாதம்  ஒரு தீர்க்­க­மான முடிவு எடுக்­க­வேண்டும் என்­பதில் சுதந்­தி­ரக்­கட்சி உறு­தி­யாக இருக்­கின்­றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற  பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி 106 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும்  பெற்­றன. 

இரண்டு பிர­தான  கட்­சி­க­ளுக்கும் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்­கான பெரும்­பான்மை பலம்  கிடைக்­கா­மையின் கார­ண­மாக இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய  அர­சாங்­கத்தை நிறு­வின. எனினும்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்  குறிப்­பிட்ட  எண்­ணிக்­கை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சில பங்­கா­ளிக்­கட்­சி­களின் எம்.பி.க்களும் முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணைந்து கூட்டு எதி­ர­ணி­யினர் என்ற பெயரில் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம்­தி­க­தி­யி­லி­ருந்து  இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்கம்  அமைக்­கப்­பட்­டது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதம்21 ஆம் திகதியுடன்  இரண்டு வருடம் நிறைவடைந்துவிட்ட போதிலும் டிசம்பர் மாதம் வரை தேசிய அரசாங்கம்  நீடிக்கவுள்ளது.  அதன் பின்னரும் தேசிய அரசாங்கத்தை நீடிக்கவேண்டும் என்பதில்  ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக இருக்கின்போதிலும்  சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள்  அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47