ஐக்­கிய தேசிய முன்­னணி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து ஆட்­சியை நடத்­து­வது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை வழங்­கு­வ­தற்­கே­யாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக திகழ்­கின்றார் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்  தெரி­வித்தார்.

 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 66ஆவது மாநாடு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு பொரளை கெம்பல் மைதா­னத்தில் இடம்­பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தனது 66 ஆவது மாநாட்­டினை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேசிய சக­வாழ்­வுக்கு அடை­யா­ள­மாக திகழ்ந்து கொண்­டி­ருக்­கின்றார். 

முதற்­த­ட­வை­யாக இந்த நாட்டில் உள்ள சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்­கான தனித்­துவ அடை­யா­ளங்கள் காப்­பாற்­றப்­படும்  என்ற வாக்­கு­றுதி வழங்­கப்­பட்டு அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடை­யா­ளமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இந்த நாட்டில்   சிங்­கள, தமிழ், முஸ்லிம் உணர்­வுகள் இருக்­கின்­றன. பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ உணர்­வு­களும் இருக்­கின்­றன. ஆனால் அவை அனைத்­துக்கும் மேலாக இலங்­கையர் என்ற உணர்வு அனை­வ­ரி­டத்­திலும் இருக்­கின்­றது. அந்த யுகம் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது

இந்த நாட்டில் ஒரு மொழி,இனம், மதம் என்ற பிற்­போக்குத் தன்மை ஒழிக்­கப்­பட்டு பல இனம், மொழி, மதம் என்ற முற்­போக்­கான எண்ணம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் கார­ணத்­தினால் தான் வடக்­கிலும், கிழக்­கிலும், மேற்­கிலும், மலை­ய­கத்­திலும் வாழும் தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக கரு­து­கின்­றார்கள்.

அத­ன­டிப்­ப­டையில் தான் 2015ஆம் ஆண்டு அவரை இந்த நாட்டின் தலை­வ­ராக தெரிவு செய்­தார்கள். அந்த நம்­பிக்கை வீண்­போ­காது. ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து   ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இணைந்து நல்­லாட்­சியை நடத்­து­கின்­றது என்றால் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தீர்­வினை வழங்­கு­வ­தற்­கா­க­வே­யாகும்.  

அதற்­கான பாரிய பொறுப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு உள்­ளது. அதே­நேரம் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தனது உரையின் போது தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­களை பிர­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யுள்­ளது. தனியே பெரும்­பான்மை மக்­களை பிரநிதித்துவப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார். 

அது மிகச் சிறந்த விடயமாகும். அந்த நிலைப்பாட்டினை கொண்டமையை நான் வரவேற்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியாக என்றும் திகழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்றார்.