இந்திய அணிக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 பெற்று 239 ஓட்டங்களை வெற்றிஇலக்காக நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப்போட்டியாக இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.