காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக காத்திருக்கும் உறவுகளிற்கு நீதி கோரும் மாபெரும் அமைதிப்பேரணி  நாளையதினம்  காலை 10.00மணியளவில்  வவுனியா காமினி விளையாட்டரங்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமூக அமைப்பினரையும் அழைக்கின்றோம் என ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

இவ் அமைதிப்பேரணியானது வவுனியா கிராமிய பெண்கள் அமைப்பு,  வவுனியா கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனம், வவுனியா மாவட்ட சர்வமதகுழு என்பவற்றின் ஒருங்கிணைப்பில்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.