பொலிஸ் திணைக்களத்தின் 151 ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இன்று  இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய வவுனியா சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார தலைமையில் பொலிஸ் தினம் இன்று காலை 9 மணியளவில்  சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிறைவு விழாவின் போது  கடமையின் போது  உயிர்நீத்த பொலிஸாரின் கடமையினை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தரவின் வாழ்த்து செய்தியினை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார வாசித்தார்.

151 ஆவது தினத்தை முன்னிட்டு மரம் நடுகையும்,  இரத்ததான நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.