இந்திய அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப்போட்டியாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான  5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 4-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைற்வோஷ் செய்துவிடலாம் என்ற முனைப்பில் இந்திய அணி கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.

இதேவேளை, தனது சொந்த மண்ணில் இலங்கை அணி சிம்பாப்வே, இந்தியா போன்ற அணிகளிடம் தொடர் தோல்விகளை சந்தித்து, இனியும் அடிவேண்ட முடியாத நிலையில் இன்றைய 5 ஆவது வெற்றியில் ஒரு ஆறுதல் வெற்றியையாவது பெற முடியுமா என்ற கேள்வியுடன் களமிறங்கவுள்ளது.

இதேவேளை, தோல்விகளால் நொந்துபோய் உள்ள இலங்கை அணியின் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இலங்கை அணி இந்த இறுதிப் போட்டியிலாவது வெற்றிபெறாத என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.

இருப்பினும் இரு அணிகளுடைய எதிர்பார்ப்புக்களையும் தவிடுபொடியாக்கும் நிலையில் காலநிலையானது தனது எச்சரிக்கையை விடுத்து வருகின்றது.

எனவே இன்றைய போட்டியில் இந்தியாவா? இலங்கையா? அல்லது காலநிலையா ? தனது அதிக்கத்தை செலுத்தப்போகின்றதென பொறுத்திருந்து பார்ப்போம்.