செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி. இலங்­கையின் பொலிஸ்­துறை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க தின­மாகும். இலங்­கையின் பொலிஸ் சேவை­யா­னது பழ­மை­யான வர­லாற்றை கொண்­டது. நவீன பொலிஸ்­து­றையின் தந்தை என குறிப்­பி­டப்­படும் சேர் ரொபட் பீல் அவர்­களால் 1829 இல் இங்­கி­லாந்தில் நிறு­விய மெட்­ரோ­பொ­லிட்டன் பொலிஸ்­து­றையே முத­லா­வது பொலிஸ்­துறை என குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. அதி­லி­ருந்து 37 ஆண்­டுகள் கடந்து அதா­வது 1866 இல் 1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க கட்­ட­ளைச்­சட்­டத்தின் மூலம் ஆரம்­பிக்­கப்­பட்­டதே இலங்கை பொலிஸ் சேவை­யாகும். அதன்­ப­டியே இன்று 151 ஆவது வரு­டத்தை இலங்கை பொலிஸ் சேவை கொண்­டா­டு­கி­றது.

அபி­வி­ருத்­தி­ய­டைந்த சமூ­கத்தின் சகல வெற்­றிக்கும் வழி­மு­றை­யாக நேர­டி­யான பங்­க­ளிப்பை வழங்கும் துறை­யாக பொலிஸ் சேவையை குறிப்­பிட முடியும். இலங்­கையில் பண்­டு­கா­பய மன்­னனின் (கி.மு 437–67) ஆட்­சியின் கீழ் இயங்­கிய பொலிஸ் கட­மை­க­ளுக்கு சம­மாக கட­மை­யாற்­றிய ‘நகர காவ­லா­ளிகள்’ என்ற பதவி காணப்­பட்­ட­தாக மகா வம்சம் கூறு­கி­றது. அதே போன்று கிராம நிரு­வாக கட­மை­களை புரி­வ­தற்­காக ஸ்தாபிக்­கப்­பட்ட நிர்­வாக கேந்­திர நிலை­ய­மா­னது அநு­ரா­த­பு­ரத்தை தலை­ந­க­ர­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­ட­போதே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பிற்­பட்ட காலங்­களில் இலங்கை தீவில் பல்­வேறு அர­சர்­களால் மக்கள் மத்­தியில் சமா­தா­னத்தை ஸ்தாபித்து கொண்டு செல்­லப்­பட்ட நிலையில் 2ஆம் உதய அர­சனால் (கி.பி 887–98) செயற்­தி­ற­னான “கம்­சபா” முறை ஒன்று அமுல் செய்­யப்­பட்­ட­தாக வர­லாறு குறிப்­பி­டு­கின்­றது.

இலங்­கையில் பொலிஸ் சேவை­யா­னது உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறையில்  பிரித்­தா­னி­யரால் 1795 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்பட்­டது. கொழும்பு துறை­மு­கத்தின் களஞ்­சி­ய­சாலை பாது­காப்­ப­தற்­கான ரோந்து பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவே அவ்­வாறு அப்­போது ஆரம்­பிக்­கப்பட்டது. பிற்­பட்ட காலங்­களில் ஒரு முறைச்­சார்ந்த பொலிஸ் சேவையின் அவ­சியம் உண­ரப்­பட்­டது.

அதற்­கி­ணங்க, 1832 ஆம் ஆண்­ட­ளவில் கொழும்பு பிர­தேசம் 15 பொலிஸ் வல­யங்­க­ளாக பிரிக்­கப்பட்டு 10 பொலிஸ் சார்ஜன்ட் , 05 கான்ஸ்­ட­பிள்கள் மற்றும் அலு­வ­லக உத­வி­யா­ளர்கள்  150 பேர் இணைக்­கப்பட்டு இலங்கை பொலிஸ் சேவை­யா­னது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் காலி, நீர்­கொ­ழும்பு, கண்டி பிர­தே­சங்­க­ளிலும் பொலிஸ் நிலை­யங்கள் நிறு­வப்­பட்­டன. இலங்­கையின் முத­லா­வது பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக அப்­போது ஊவா பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பாக இருந்த லொக்­கு­பண்டா துனு­வில, கண்டி பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க கட்­டளைச் சட்­டத்தின் கீழ் பொலிஸ் சேவை அதி­கா­ர­பூர்­வ­மாக ஸ்தாபிக்­கப்­பட்ட பின் பிர­தான பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக இருந்த ஜி.டபிள்யூ.ஆர் கெம்பல் முத­லா­வது பொலிஸ் மா அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்ட அதே வேளை 1947 ஆம் ஆண்டில் முத­லா­வது பொலிஸ் மா அதி­ப­ராக இலங்­கையை சேர்ந்த ஸ்ரீமத் ரிச்சட் அலு­வி­கார நிய­மனம் பெற்றார். இது இலங்கை பொலிஸ் வர­லாற்றின் மைல்­கற்­க­லாகும். பொலிஸ் துறையின் வளர்ச்­சிக்கு மிகப்­பெ­ரிய சேவை அவ­ரினால் ஆற்­றப்­பட்­டுள்­ளது.

அதே போன்று பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் ஒருவர் கட­மையில் இருக்கும் போது சட்டம் மற்றும் ஒழுங்கை பாது­காப்­ப­தற்­காக உயிர் தியாகம் செய்த முத­லா­வது சம்­பவம் 1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பதி­வா­கி­யுள்­ளது. மாவ­னெல்ல உது­வன்­கந்த பிர­தே­சத்தில் தீகி­ரி­கே­வகே சர­தியல் என்ற சந்­தேக நபரை கைது செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட பொலிஸ் நட­வ­டிக்­கையின் போது அவ­ருடன் இருந்த மற்­றொரு சந்­தேக நப­ரான மம்­மலே மரிக்கார் என்­ப­வரின் துப்­பாக்கிச் சூட்­டிற்கு இலக்­காகி சபான் என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் வீர மரணம் அடைந்த சம்­ப­வமே அந்த பதி­வாகும்.

பொலிஸ் வீர­ரான சபான் உத்­தி­யோ­கத்தர் முதல் இன்று வரை 3117 பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் இலங்கை மண்­ணிற்­காக, பொது மக்­களின் உயிர் மற்றும் உடை­மை­களை பாது­காப்­ப­தற்­கா­கவும் வீர­ம­ரணம் அடைந்­துள்­ளனர்.

இந் நாட்டு மக்­களின் உயிர் மற்றும் சொத்­துக்­களை பாது­காப்­ப­தற்­காக பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவு 1915 இல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  அப்­போது இலங்­கையில் முதன் முத­லாக யுத்­தச்­சட்டம் மேல் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் அர­சினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்பட்டு அதனை அமுல் செய்யும் பொறுப்பு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்கப்பட்­டி­ருந்­தமை வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளது. அவ்­வாறே இலங்கை ஜன­நா­ய­கத்­தினை மீள் நிர்­ண­யிக்­கப்­பட முன்­ன­ரான காலப்­ப­கு­தியில் (1948–971) நாட்­டினுள் இடம்­பெற்ற பல்­வேறு வன்­முறை சூழ்­நி­லை­களில் மக்­களின் உயிர் மற்றும் சொத்­துக்­களை பாது­காப்­ப­தற்­காக பொலிஸார் குறைந்த வச­தி­க­ளுடன் சேவை­யாற்­றி­யுள்­ளனர்.அக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே முதன் முறை­யாக பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கொலை செய்­யப்­பட்டார். எல்.ரீ.ரீ.டி யுடன் இடம் பெற்ற யுத்­ததின் போது பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் 15 பேர்­உயிர்த் தியாகம் செய்­துள்­ளனர்.

அவ்­வாறே இலங்கையின்  தென் பிர­தே­சத்தில் ஏற்­பட்ட அமை­தி­யின்­மைக்கும் முப்­பது வரு­ட­மாக வட கிழக்கில் இடம்­பெற்ற புலி­க­ளு­ட­னான யுத்­தத்தில் முப்­ப­டை­க­ளுடன் இணைந்தும் தாய் மண்ணை பாது­காப்­ப­தற்­காக இலங்கை பொலிஸார் உயிர்த் தியா­கங்­களும் அத­னூ­டாக கண்ட வெற்­றி­களும் அளப்­ப­ரி­யவை.

முழு இலங்கை மக்­களின் உயிர் மற்றும் சொத்­துக்­களை பாது­காப்­ப­தற்­காக 365 நாட்­களும் இரவு பக­லாக செயற்­ப­டு­வது பொலி­ஸா­ராவர்.  தற்­போது 484 பொலிஸ் நிலை­யங்­களும் மற்றும் 100000 பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளையும் இலங்கை பொலிஸ் கொண்­டுள்­ளது. 600 பொலிஸ் நிலை­யங்கள் வரை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு தற்­போது நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­காக பொலிஸ் மா அதிபர் , சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சு, பிர­தமர், ஜனா­தி­பதி ஆகி­யோரின் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த 151 வரு­டத்தில் அண்­மைய  50 வரு­டத்­திற்குள் சிறப்­பு­மிக்க பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து இலங்கை பொலிஸ் பெற்­றுக்­கொண்ட வெற்­றிகள் வரை­ய­ரை­யற்­ற­தாகும். விஷே­ட­மாக யுத்தம் இடம் பெற்ற காலப்­ப­கு­தியில் மற்றும் யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் குற்­றங்­களை கட்­டு­ப்ப­டுத்­து­வ­திலும் மிகச் சிறப்­பாக பொலிஸார் செயற்­பட்­டுள்­ளனர். அவ்­வாறே பல்­வேறு போதைப் பொருட்கள் நாட்­டினுள் பர­வு­வதை தடுப்­ப­தற்­காக கருத்தில் கொள்ள வேண்­டிய ஒழிப்பு முறை­களை வெற்­றி­க­ர­மாக பொலிஸார் கையாண்­டுள்­ளனர். வாக­னங்கள் அதி­க­ரிப்பு மற்றும் சனத்­தொகை வளர்ச்­சிக்கு ஏற்­ற­வாறு வாகன விபத்­துக்­களை மட்­டுப்­ப­டுத்தி மர­ணத்தை ஏற்­ப­டுத்­த­வல்ல வாகன விபத்­துக்கள் மற்றும் பார­தூ­ர­மான சொத்து சேதங்­களை ஏற்­ப­டுத்தும் விபத்­து­களை மட்­டுப்­ப­டுத்த பொலி­ஸாரால் முடிந்­துள்­ளது. இதற்கு மேலாக ஏனைய அரச நிறு­வ­னங்­க­ளினால் மேற்­கொள்­ளப்­படும் செயற்­பா­டுகள் தொடர்­பாக ஒத்­து­ழைப்பு வழங்­குதல் பொலி­ஸாரின் பணி­களில் உள்­ள­டக்­கப்­படும். அதன்­படி சுற்­றாடல் பாது­காப்பு, கரை­யோர பாது­காப்பு, அனு­ம­தி­யின்றி சுரங்கம் அகழ்வு மற்றும் மணல் அகழ்வு வயல் மற்றும் சதுப்பு நிலம் தோண்­டுதல், சட்ட விரோத மது­பானம் தயா­ரித்தல் போன்­ற­வற்றை தடுப்­ப­தற்­கா­கவும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­கா­கவும் இலங்கை பொலிஸ் தொடர்ந்தும் சிறப்­பான பங்­க­ளிப்பை செய்து வரு­கின்­றது.

அவ்­வாறே மக்­களின் நலன்­களை அதி­க­ரிப்­ப­தற்­கான புதிய இலக்­குகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கி­ணங்க,

1-. தற்­போது 70 வீத­மாக காணப்­படும் சொத்­துக்கள் சம்­பந்­த­மான குற்­றங்­களை தீர்ப்­பது தொடர்­பி­லான வீதத்தை 75 வீதம் வரை அதி­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

2-. வாகன விபத்­துக்­களை மேலும் 10 வீதத்தால் குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதற்காக, சன நெரிசல் அற்ற பிரதேசங்களில் ஏற்படும் வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்கு கூடிய கவனம் செலுத்தவும், பெருந்தெருக்களிலும் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒழுங்குகளில் தொடர்ந்து இருந்து வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொது பயணிகள் சேவையை இலகுபடுத்த தனிவழி போக்குவரத்து முறைமையை செயற்படுத்துவதுடன் ஊடாக  போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்தை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

3-. ஜனா­தி­ப­தியின் போதை­ப்பொ­ரு­ளி­லி­ருந்து விடு­பட்ட நாடு எனும் கருப்­பொ­ருளில் செயற்­ப­டுத்த ஒத்­து­ழைப்பு வழங்­குதல். அதற்­காக விஷேட பொலிஸ் பிரி­வொன்றை நிறுவி அதன் மூல­மாக போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக தொடர்பு கொள்ள வேண்­டிய ஏனைய அரச நிறு­வ­னங்­களுடன் இணைந்து தொடர்ந்தும் செயற்­பட தீர்­மா­னித்­துள்­ளது.

4-. பொது­மக்­க­ளுக்கு பொலிஸ் சேவையை இல­கு­வாக பெற்று கொள்­வ­தற்கு முடிந்­த­வரை ஒரு மாத காலம் நடை­முறைப்படுத்­தப்­படும் வகையில் நட­மாடும் பொலிஸ் நிலையம் ஆரம்­பிக்­கப்­பட்டு “கிரா­மத்­திற்கு பொலிஸ்” எனும் நிகழ்ச்சித் திட்டம் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

5-. பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் நீண்­ட­காலம் முகம் கொடுத்­து­வரும் பிரச்­ச­னைகள் தொடர்­பாக விரை­வான தீர்வை பெற்று கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன், விஷே­ட­மாக பல்­வே­று­பட்ட சட்ட சிக்­கல்­க­ளுக்கு உள்­ளாகி வேலை நிறுத்தம் மற்றும், வேலை இடை நீக்கம் செய்யம் செய்­யப்­பட்டு வெகு கால­மாக கட­மை­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்கும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களின் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை விரை­வு

­ப­டுத்தி அதற்­கான தீர்­வு­களை விரைவாக மேற்கொள்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எதிர்பார்ப்புக்களுடன் 151 ஆவது பொலிஸ் தின உத்தியோகபூர்வ நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் மேலதிக படைத் தலைமையக விளையாட்டரங்கில் எதிர்வரும் 7ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ் மாலைப்பொழுதில் பொலிஸ் பராசூட் களியாட்டம், பொலிஸ் வாத்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டிய கச்சேரி, உடற்பயிற்சி களியாட்டம், பொலிஸ் குதிரை மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களின் விநோத விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.