சு.க.வின் 66 ஆவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று

Published By: Robert

03 Sep, 2017 | 09:05 AM
image

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 66 ஆவது மாநாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­ பால சிறி­சே­னவின் தலை­மையில் இன்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாநாட்டின் பின்னர் கட்சி முக்­கிய தீர்­மா­னங்கள் பல­வற்றை எடுக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

இம்­மா­நாட்­டிற்கு கட்­சியின் போச­க­ராக செயற்­பட்டு வரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளி ட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த சகல உறுப்­பி­னர்­க­ளுக்கும் கட்சி மாநாட்டில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அழைப்­பினை உதா­சீனம் செய்து கலந்­து கொள்ளா­த­வர்­க­ளுக்கு இனி­வரும் இதுபோன்ற முக்­கிய நிகழ்­வு­க­ளுக்கு அழை ப்பு விடுக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சியின் மாநாட்டின் பின்னர் கூட்டு 

எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த குமார வெல்­கம, பிர­சன்ன ரண­துங்க, ரஞ்ஜித் சொய்சா, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே மற்றும் பிர­சன்ன ரண­வீர ஆகியோர் கட்­சியின் ஒழுக்­காற்றுக் குழு­வுக்கு அழைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதற்­கான தீர்­மா­னத்தை கட்சி எடுத்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது. 

அதே­போன்று இதற்கு முன்னர் ஒழுக்­காற்று விசா­ரணை நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­யாக கரு­தப்­பட்­டுள்ள புத்­தளம் மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சனத் நிசாந்­தவை கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

சுதந்­திரக் கட்­சியின் 66 ஆவது மாநாட்டில் கலந்து கொள்­ளு­மாறு தனக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் அவ­ருக்­கான அழைப்­பி­தழை வீட்­டிற்கே அனுப்­பி­ய­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் துமிந்த திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். 

எனினும் இன்று நடை­பெ­ற­வுள்ள சுதந்­திரக் கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ மற்றும் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11