மெக்­ஸிக்­கோவின் குவா­டலூப் தீவுக்கு அப்பால் கட­லுக்குள் இறக்­கப்­பட்ட கூண்­டொன்­றி­லி­ருந்த நீர்­மூழ்­கி­வீரர் ஒருவர், அந்தக் கூண்­டி­லி­ருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கூண்டை நோக்கி வந்த அபா­ய­க­ர­மான சுறாவின் மூக்குப் பகு­தியில் துணிச்­ச­லுடன் தட்டிக் கொடுப்­பதை படத்தில் காணலாம்.

சுறா­ மீன்­களைக் கவர்ந்­தி­ழுத்து அவற்றை அரு­கா­மையில் அவ­தா­னிப்­பதே அந்த 3 நீர்­மூழ்­கி­வீ­ரர்­க­ளதும் ஆரம்ப நோக்­க­மாக இருந்­தது. இதற்­காக அவர்கள் கூண்­டுக்கு வெளியில் உணவுப் பொருட்களை தொங்­க­விட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் உணவால் கவ­ரப்­பட்டு அவர்­க­ளது கூண்டை நெருங்கி வந்த அபா­ய­க­ர­மான சுறா மீனை கண்ட குறிப்­பிட்ட நீர்­மூழ்­கி­வீரர் ஏனைய நீர்­மூழ்கி வீரர்கள் சிறிதும் எதிர்­பார்க்­காத தரு­ணத்தில் கூண்­டிற்கு வெளியில் தலையை நீட்டி அந்த சுறா மீனின் மூக்குப் பகுதியை துணிகரமாக தட்டி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.