இருபதுக்கு - 20 துடுப்பாட்ட தாக்குதல் ( CRICKET BASH - 2017 ) போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு பாடசாலைகளின் மைதானங்களில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 

பிரித்தானிய தமிழ் துடுப்பாட்ட லீக் (British Tamil Cricket League) லெபாறா (Lebara) நிறுவனத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட பாடசாலைகள்  துடுப்பாட்டச் சங்கத்துடன்  இணைந்து இந்த இருபதுக்கு 20 துடுப்பாட்ட தாக்குதல் CRICKET BASH - 2017 முன்னெடுத்துள்ளன.

நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 20 பாடசாலைகளின் 19 வயதிற்குட்ட துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குபற்றுகின்றன.

செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமான இப்போட்டிகள் எதிர்வரும்  5 ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளன. இறுதிப்போட்டி 5 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பிரித்தானிய தமிழ் துடுப்பாட்ட லீக் துடுப்பாட்ட திறன்களை வடக்கு, கிழக்கில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே வளர்த்தெடுத்து இளம் விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்காக்கொண்டு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. 

அதற்காக கடந்த ஆண்டில் இருந்து விளையாட்டு வீரர்களையும் பயிற்றுனர்களையும் பயிற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.