அதிவேகமாக பந்துவீசும் பெயர்பட்டியலில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்ராக் இணைந்து கொண்டுள்ளார்.

Michelle Stack

நியூசிலாந்துக்கு எதிராக  நேற்று  இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மிச்செல் ஸ்ராக், மணித்தியாலத்திற்கு 160.4 கீலோமீற்றர் என்ற வேகத்தில் பந்து வீசியதன் மூலம் 5 ஆவது வேகப்பந்து வீச்சாளராக இணைந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் மணித்தியாலத்திற்கு 161. 3 கீலோமீற்றர் என்ற வேகத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் பந்துவீசிய பிரதியே இப்போதைக்கு உலகில் அதிவேகமாக வீசப்பட்ட பந்துவீச்சாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.