யுத்த காலத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களை  விட  அண்­மைக்­கா­ல­மாக மாத்­தளை  மாவட்­டத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களால் ஏற்­பட்ட உயிரிழப்புக்கள் அதிகமென மாத்­தளை  மாவட்ட சிரேஷ்ட  பொலிஸ் அத்­தி­யட்­சகர் மாவட்ட இணைப்­புக்­குழுக் கூட்­டத்தின் போது  தெரி­வித்தார். 

மேற்­படி வாகன விபத்­துகளோடு  தொட­ரப்­பட்ட வழக்­குகள்  மூலம் 7 இலட்­சத்து 3 ஆயி­ரத்து 20 ரூபாய் தண்­டப்­ப­ண­மாக அற­வி­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட அவர், வாகன விபத்­து­க்களைத் தடுப்­ப­தற்கு பொலிஸார் எத்­த­கைய  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தாலும் கூட சாரதி களின்  உதாசீனம் காரணமாகவே இத்தகைய விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.