புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­காக இந்­தியா தனது பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ய­ளித்­துள்ளார். 

இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள இந்­தி­யாவின் வெளிவி­வ­கார அமைச்­ச­ரான சுஷ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான சந்­திப்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் உள்ள பிர­மு­கர்­க­ளுக்­கான பகு­தியில் நேற்று வெள்ளிக்­கி­ழமை முற்­பகல் 11.45 மணியளவில் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. இச்­சந்­திப்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனும் பங்­கேற்­றி­ருந்தார். 

அரை மணி­நே­ர­மாக நடை­பெற்ற இச்­சந்­திப்­பின் ­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், இந்திய வெளிவி­வ­காரக அமைச்சரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­தா­வது,

"புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்கும் கரு­மத்­திற்கு உரிய முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். இதனை மேலும் இழுத்­த­டிக்­கப்­ப­ட­லா­காது.  இந்த விடயம் சம்­பந்­த­மாக ஏற்­க­னவே பல்­வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அந்த நட­வ­டிக்­கை­களின் அடிப்­ப­டையில் மேலும் கால­தா­மதம் ஏற்­ப­டாத வகையில் அர­சி­ய­ல­மைப்பு யாப்பின் வரை­வா­னது இந்த வருட இறு­திக்குள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு, அதனைத் தொடர்ந்து உட­ன­டி­யாக அது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

இலங்கை அர­சாங்­க­மா­னது இந்த நாட்டு மக்­க­ளுக்கும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­களின் அடிப்­ப­டையில் இந்தக் கரு­மத்­தினை நிறை­வேற்­று­வ­தனை இந்­திய அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றார். 

இதன்போது இந்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்த வெளி விவகார அமைச்சர், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவருமுகமாக தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.