சமத்­து­வத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு புனித ஹஜ் முன்­னு­ரிமை வழங்­கு­கி­றது : ரணில் விக்­கி­ர­ம­சிங்க

Published By: Digital Desk 7

02 Sep, 2017 | 10:38 AM
image

"சுய­நலம், பேராசை என்­ப­வற்­றி­லி­ருந்து விடு­பட்டு தம்­மி­ட­முள்­ள­வற்றை ஏனை­யோ­ருடன் பகிர்ந்து கொள்­ளுதல், சக வாழ்வு மற்றும் உயர்வு, தாழ்­வினை நீக்கி சமத்­து­வத்­தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற உய­ரிய நோக்­கங்­க­ளுக்கு ஹஜ் பெரு­நாள் முன்­னு­ரிமை வழங்­கு­கி­றது. அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி முழு உல­கவாழ் மக்­க­ளுக்கும் மிகச் சிறந்த முன்­மா­தி­ரி­யாகும் என நான் கரு­து­கிறேன்" என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அவர் விடுத்­துள்ள ஹஜ் பெருநாள் செய்­தியில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

"உலகம் முழு­வ­து­முள்ள முஸ்­லிம்கள் ஏழை – பணக்­காரன், கற்­றவர் – கல்­வி­யற்­றவர் என்ற எவ்­வி­த­மான பேத­மு­மின்றி மக்கா நகரில் ஒன்று சேர்ந்து, சமயக் கிரி­யை­களை மேற்­கொள்ளும் ஹஜ் நிகழ்வு இஸ்லாம் மார்க்­கத்தில் மிகவும் உய­ரி­ய­தாகக் கரு­தப்­படும் முக்­கி­ய­மா­னதோர் சமய நிகழ்­வாகும் .

இப்­ராஹீம் நபி­ய­வர்கள் தனது மக­னான இஸ்­மாயில் நபியை இறை­வ­னுக்­காகத் தியாகஞ் செய்ய முன்­வந்­த­மையை வெளிப்­ப­டுத்தும் இந்த நிகழ்­வினை உலகம் முழு­வதும் பரந்­துள்ள இஸ்­லா­மிய பக்­தர்கள் ஒன்­றி­ணைந்து உலக அமைப்­புக்­காக சமயக் கிரி­யை­களை மேற்­கொள்ளும் சர்­வ­தேச மாநா­டா­கவும் கரு­த­மு­டியும்.

சுய­நலம் மற்றும் பேராசை என்­ப­வற்­றி­லி­ருந்து விடு­பட்டு தம்­மி­ட­முள்­ள­வற்றை ஏனை­யோ­ருடன் பகிர்ந்து கொள்­ளுதல், சக வாழ்­வுடன் வாழுதல், சமூ­கத்தில் உயர்வு, தாழ்­வினை நீக்கி சமத்­து­வத்­துத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற உய­ரிய நோக்­கங்­க­ளுக்கு ஹஜ் பெரு­நாளில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி முழு உல­கவாழ் மக்­க­ளுக்கும் மிகச் சிறந்த முன்­மா­தி­ரி­யாகும் என நான் கரு­து­கிறேன். 

அந்த ஆன்­மீகப் பெறு­மா­னங்­களை உல­கிற்கு கொண்டு செல்வதற்கான பலம், துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து, இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் பக்தர்களுக்கும் மகிழ்ச்சியான பெருநாளாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்". என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15