வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு : அமெரிக்கா, இந்தியாவிடம் ஜனாதிபதி உறுதி

Published By: Priyatharshan

02 Sep, 2017 | 09:36 AM
image

வரு­டத்தின் இறு­திக்குள் புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்கா, இந்­தி­யா­வி­டத்தில் உறு­தி­படத் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் காண­ாம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்­தினை ஸ்தாபிப்­ப­தற்­கு­ரிய சகல நட­வ­டிக்­கை­க­ளையும் விரைந்து முன்­னெ­டுப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார். 

தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் மற்றும் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகி­யோரைச் சந்­தித்த போது ஜனா­தி­பதி இந்த உறு­தி­ய­ளிப்பை செய்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்த உறுதி மொழி தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­தா­வது, 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும், தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்­மை­யா­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை  இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் இல்­லத்தில் நடை­பெற்­றது. 

இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் புளொட் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி, ரெலோ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகி­யோரும் கூட்­ட­மைப்பின்  யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்­மை­யா­ருடன் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பும் பங்­கெ­டுத்­தி­ருந்தார்.

இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், குறிப்­பி­டு­கையில்

தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் பணி­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பூரண ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றது. இருப்­பினும் பிர­தான கட்­சிகள் இந்த விட­யத்தில் ஒரு­மித்த பய­ணத்­தினை மேற்­கொள்­வதில் சில இடர்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இதன் கார­ணத்­தினால் கடந்த வருடம் டிசம்பர் 10ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையின் வரைவு தற்­போது வரையில் பூர்த்தி செய்­யப்­ப­டாது கால­தா­ம­த­மாகிக் கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்கம் காலம் தாம­திப்­பதால்  தமிழ் மக்­களே பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றார்கள். ஆகவே பிர­தான கட்­சிகள் இரண்டும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பாட்டில் அதி­க­ளவு கரி­ச­னையைக் காட்ட வேண்டும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்கா முன்­னெ­டுக்க வேண்டும் எனக் கோரி­யுள்ளார்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவே தமிழ் மக்­களின் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்ற நம்­பிக்­கையைக் கொண்­டி­ருக்­கின்றோம். ஒரு­மித்த நாட்­டிற்குள் பிக­ரப்­பட்ட இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட வேண்டும். தமிழ் மக்கள் சம­உ­ரிமை கொண்ட பிர­ஜை­க­ளாக கௌர­வ­மா­கவும் பாது­காப்­பா­கவும் வழ்­வது புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது எனவும் சம்­பந்தன்  குறிப்­பிட்­டுள்ளார்.

இச்­ச­ம­யத்தில் பதி­லு­ரைத்த தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ், குறிப்­பி­டு­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நான் சந்த்­தி­ருந்தேன். அவர் இந்த வருட இறு­திக்குள் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை பூர்த்தி செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ளார் என்றார்.

அத­னை­ய­டுத்து காண­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் விவ­காரம் தொடர்­பிலும் கூட்­ட­மைப்­பி­னரால்  அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தமா­த­மாகிச் செல்­வது தொடர்­பாக சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போது    காண­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்­தினை ஸ்தாபிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து முன்­னெ­டுப்­ப­தாக ஜனா­தி­பதி தன்­னி­டத்தில் தெரி­வித்­த­தாக உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இதே­வேளை நேற்று வெள்­ளிக்­கி­ழமை முற்­பகல் 11.45 அளவில் இலங்­கையில் நடை­பெற்ற இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு­வினர் தமது பய­ணத்தின் இறு­தியில் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரான இரா.சம்­பந்­த­டைின சந்­தித்­தி­ருந்­தனர். இச்­சந்­திப்பில் கூட்­ட­மைப்பின் சார்பில் சுமந்­திரன் எம்.பி. யும் பங்­கேற்­றி­ருந்தார்.

இச்­சந்­திப்பின் போது நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லிலும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன், புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கைகள் கால தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வது குறித்தும் அவ்­வி­ட­யத்தில் இந்­தியா தனது கரி­ச­னையை அர­சாங்­கத்­தி­டத்தில் வெளிப்­ப­டுத்தி அழுத்­தங்­களை வழங்க முனை­ய­வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அச்­ச­ம­யத்தில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், குறிப்பிடுகையில் புதிய அரசியலமைப்பு விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம். வீணாக காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நாமும் அவதானித்திருந்தோம். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போதும் கவனம் செலுத்தியிருந்தேன். அவர்(ஜனாதிபதி) அது குறித்து சாதகமான வெளிப்பாட்டை செய்திருக்கின்றார். அதனை தங்களித்தில் (எதிர்க்கட்சித்தலைவரிடத்தில்) கூறுவதற்கே விசேடமாக இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டினை செய்திருக்கின்றேன் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19