எங்கள் கண்ணீர் இரத்­த­மா­கின்­றது. ஜனா­தி­பதி, பிர­தமர் ஐயா மாரே எங்­க­ளு­டைய பிள்­ளை­களை தாருங்கள். பத்­து­மாதம் சுமந்து பெற்ற எங்கள் பிள்­ளை­களைத் தாருங்கள். இல்­லையேல் உண்­ணா­வி­ரதம் இருந்து உயி­ரை­மாய்ப்போம் என்று காணா­மல்­போன உற­வு­களின் பெற்­றோர்கள் கதறியழுது தமது சோகத்தை வெளிப்படுத்தினர்.

யாழ். மத்­திய பேருந்து நிலை­யத்தில் நேற் றுக் காலை இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தின்­ போதே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சகல அர­சியல் சிறைக் கைதி­க­ளையும் உடன் விடு­தலை செய்­யுமாறு கோரியும் காணாமல் ஆக்­கப்­பட்­டோர்­களை

வெளிப்­ப­டுத்­துமாறு வலியுறுத்தியும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை இரத்துச் செய்யுமாறும் கோரியும் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இப்­போ­ராட்டம் நடை­பெற்­றது.

இப்­போ­ராட்­டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் தாய் ஒருவர் தெரி­விக்­கையில்,

"யுத்தம் முடி­வுற்று 6 வரு­டங்கள் நிறை­வ­டைந்த நிலையில் எமக்கு எவ்­வி­த­மாக முடி­வு­களும் தரப்­ப­ட­வில்லை.

நாங்­களும் பல போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம். எவ்­வித பதிலும் கிடைக்­க­வில்லை. காணாமல் போன­வர்­களைக் கண்டு பிடித்து தரு­வ­தாகக் கூறு­கி­றார்கள். முடிவு தெரி­ய­வரும் என்­கி­றார்கள். எவ்­வித முடிவும் கிடைக்­க­வில்லை.

நாம் எமது பிள்­ளை­களை 10 மாதம் சுமந்து பெற்று ஆளாக்­கினோம். யாரி­டமும் வாங்­க­வில்லை. நீங்கள் பெற்­றெ­டுத்த பிள்­ளைகள் பற்றி உங்­க­ளுக்குத் தெரியும். இனி­யா­வது அவர்கள் எங்­குள்­ளார்கள் என்­பதை அறி­வி­யுங்கள்.

இனியும் தாம­தப்­ப­டுத்­தாமல் முடி­வு­களை அறி­வி­யுங்கள். நாம் கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு கண்ணீர் வற்றிப் போய்­விட்­டது. எமது கண்ணீர் இரத்­த­மா­கி­றது. எமது பிள்­ளை­களைக் கண்­டு­பி­டித்துத் தாருங்கள்.

பொங்­க­லுக்கு வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க எமது உற­வுகள் உயி­ரோடு இல்லை என்ற கருத்தை கூறி­யி­ருக்­கிறார். நீங்­களே கொண்டு போன பிள்­ளை­களை எப்­படி இப்­படி கூற­மு­டியும்?

நாம் எமது பிள்­ளை­களை உற­வு­களை இரா­ணு­வத்­திடம் அவர்கள் ஒலி பெருக்­கியில் கூறும் போதே அவர்­க­ளிடம் ஒப்­ப­டைத்தோம். அவ்­வா­றான சூழலில் எவ்­வாறு இத்­த­கைய கூற்றைக் கூற­மு­டியும்.

பல போராட்­டங்கள் நடாத்தி கத­று­கிறோம். குமு­று­கிறோம். புரண்­டெ­ழும்­பு­கின்றோம். எமக்கு இன்னும் முடிவு கிடைக்­க­வில்லை.

வயது வித்­தி­யா­ச­மின்றி குடும்பம் குடும்­ப­மாக சிறுவர் பிள்­ளை­க­ளாக சர­ண­டைந்­தார்கள். நாங்கள் உங்­க­ளிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தோம் அவர்­களை இப்போது எங்­க­ளிடம் தாருங்கள்.

எமக்கு எமது உற­வு­களைத் தாருங்கள். எங்கள் பிள்ளைகளைத் தாருங்கள். எமக்கு வீடுகள் வேண்டாம். காணிகளும் வேண்டாம் பணமும் வேண்டாம். எமக்கு எமது பிள்ளைகளை எம்மிடமே ஒப்படையுங்கள்.

இனியும் ஏமாற்றப்பட்டால் உண்ணாவிரதம் இருந்து எமது உயிரை மாய்ப்போம் எனத் தெரிவித்தார்.