அமெரிக்கா பிட்டிஸ்பர்க்கை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன் காரில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது தன் குழந்தையை தனக்கு தானே பிரசவம் பார்த்து காரினுள் பிரசவித்துள்ளார்.

நிறை மாத கர்ப்பிணியான குறித்த பெண் காரில் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட உதவிக்கு யாருமில்லாத நிலையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார்.

ஆனால் பிரசவிக்கப்பட்ட குழந்தை பனிக்குடம் உடையாமல் வெளியில் வந்துள்ளது.

பனிக்குடம் உடையாமல் பிறந்த குழந்தையை தாய் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் தாய்க்கும் சேய்க்கும் விரைந்து சிகிச்சையளிக்கப்பட்டு இருவரும் காப்பற்றப்பட்டுள்ளனர். 

பனிக்குடத்துடன் பிறந்த குழந்தை உயிருடன் இருப்பது அப் பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.