வவுனியா பசார் வீதியில்  அமைந்துள்ள சரவணா சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தின்  இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட  திடீர்  தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இத் தீ விபத்துச் சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பசார்  வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமான சரவணா சில்க்ஸின்  களஞ்சியசாலையில் இன்று   காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

உடனடியாக வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இத் தீயானது  கட்டிடத்தின் இரண்டாம் மாடியிலுள்ள கணனியிலிருந்து பரவியிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

அப்பகுதி தற்போது புகைமண்டலமாக காணப்படுவதுடன் இலங்கை மின்சார சபையினர் அப்பகுதிக்கான மின் இணைப்பினை துண்டித்துள்ளனர்.