கிரிக்கெட் வீரர்கள் உள­வியல் ரீதியில் பாதிப்பு : "திலங்­க­ சு­ம­தி­பால உட­ன­டி­யாக தனது பத­வி விலக வேண்டும்"

Published By: Robert

01 Sep, 2017 | 11:01 AM
image

இலங்கை கிரிக்கெட் துறையின் வீழ்ச்­சிக்கு வீரர்கள் கார­ண­மல்ல. கிரிக்கெட் நிர்­வா­க­மே கார­ண­மா­க­வுள்­ளது. எனவே  அது தொடர்பில் பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்­து­மாறு கூட்டு எதிர்க்­கட்சி சபா­நா­ய­க­ரிடம் வேண்­டுகோள் விடுக்­க­வுள்­ளது. அத்­துடன் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட­ன­டி­யாக தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஷெஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கை யில், 

 இலங்கை கிரிக்கெட் தொடர்பில் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க அர­சாங்­கத்­தின்­ மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்தார். எனவே அது தொடர்பில் இரு­பத்து நான்கு மணி நேரத்தில் மக்­களை தெளி­வு­றுத்­து­மாறு அர­ சாங்­கத்­திடம் நாம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தோம்.

எனினும் இரு வாரங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் அது தொடர்பில் அர­சாங்கம் எது­வித அறி­வித்­தல்­களும் விடுக்­க­வில்லை. மேலும் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்­க­விற் கும் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருக்­கு­மி­டையில்  அமைச்­ச­ர­வையில் பிணக்கு ஏற்­ பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது. எனவே இது மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாகும். ஆகவே  உரிய விசா­ரணை நடத்தி மக்­களைத் தெளி­வு­றுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கிறோம்.

மேலும் கிரிக்கெட் தர­வ­ரி­சையில் இல ங்கை அணி தற்­போது பின்­வ­ரி­சைக்குச் சென்­றுள்­ளது. வீரர்கள் அடிக்­கடி மாற்­றப்­ப­டு­கின்­றனர். தெரி­வுக்­குழு இரா­ஜி­னாமாச் செய்­கி­றது. இவ்­வா­றான நிலையில் ஆயி­ரக்­க­ணக்­கான பொலி­ஸாரை பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்தி போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. 

ஆகவே இலங்கை கிரிக்கெட் துறைக்­குள் நுழைந்­துள்ள அர­சி­யலை இல்­லா­ம­லாக்க வேண்டும். அத்­துடன் கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சும­தி­பா­லவின் உற­வி­னர்­க­ளுக்கு விளை­யாட்டு தொடர்பில் சூதாட்டம் நடத்தும் நிறு­வ­னங்கள் உள்­ளன.  எனவே அவர்­ மீதும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவர் அது தொடர்பில் மக்­களை தெளி­வு­றுத்த வேண்டும். அல்­லா­து­போனால் அவர் தற்­கா­லி­க­மா­க­வா­வது கிரிக்கெட் சபையின் தலை­மைப்­ப­த­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்ய வேண்டும்.

மேலும் அர­சியல் உள்­நு­ழைந்­தி­ருப்­ப­தனால் வீரர்கள் உள­வியல் ரீதியில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் இலங்கை கிரிக்கெட் வர­லாற்றில் எப்­போ­து­மில்­லா­த­வாறு தற்­போது ரசிகர்கள் கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்­பினைத் தெரி­விக்­கின்­றனர். ஆகவே கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு எதிர்ப்பைத் தெரி­விக்க வேண்டாம் என இர­சி­கர்­க­ளிடம் கேட்­டுக்­கொள்­கிறோம். ஏனெனில் இந்நிலைக்கு வீரர்கள் கார ணமல்ல. கிரிக்கெட் நிர்வாகமே கார ணமாகும். எனவே இலங்கை கிரிக்கெட் துறையின் வீழ்ச்சி தொடர்பில் பாராளு மன்றில் விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி சபாநாய கரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41