இடம்பெயரும்போது வீட்டையும் கொண்டு செல்லும் மக்கள்.!

Published By: Robert

01 Sep, 2017 | 11:38 AM
image

 ஒரு இடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு இடம்பெயரும் போது வீட்டிலுள்ள தளபாடங்களையும் பாவனைப் பொருட்களை எம்முடன் எடுத்துச் செல்வது வழமை.  

ஆனால் சிலி நாட்டு தீவொன்றைச் சேர்ந்த மக்கள் தாம் இடம்பெயரும் போது மேற்படி பொருட்களுடன்  தமது வீடுகளையும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 சிலியின் தென் லொஸ் லாகோஸ் பிராந்தியத்திலுள்ள  அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தீவான சிலோவைச் சேர்ந்த மக்கள் மோசமான கால நிலைமாற்றங்கள், மண்ணரிப்பு மற்றும் பாரிய கடல் கொந்தளிப்புகள் காரணமாக அடிக்கடி இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.

 இந்நிலையில் அவ்வாறு இடம்பெயரும் போது தாம் புதிதாகச் செல்லும் இடங்களில் தங்குமிட வசதியை உறுதிசெய்ய தமது வீடுகளை  இவ்வாறு கொண்டு செல்கின்றனர்.

இதற்காக வீடுகளின் அடிப்பாகம் நகர்த்தக் கூடிய வகையில் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த வீடுகளின் அடிப்பாகத்தில் சக்கரங்களைப் பொருத்தி கால்நடைகள் மற்றும் ஏனைய உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்த வீடுகள் வேறு இடங்களுக்கு  இழுத்துச் செல்லப்படுகின்றன.

 அந்தப் பிராந்தியத்தில் வீடொன்று இழுத்துச் செல்லப்படவுள்ள தினத்தில் அந்தத் தீவிலுள்ள ஏனைய குடும்பங்களுக்கு அந்த செயற்பாட்டுக்கு உதவ அழைப்பு விடுக்கப்படுகிறது.  பல நாட்களை எடுத்துக் கொள்ளும் மேற்படி சிரமமிக்க பணியில் கட்டணம் எதனையும் பெறாது தொண்டு அடிப்படையிலேயே தீவுவாசிகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

இதன்போது  வீட்டிலிருந்த தளபாடங்கள் உள்ளடங்கலான பொருட்கள்  அகற்றப்பட்டு வெறுமை நிலையில் வீடு இழுத்துச் செல்லப்படும்.

அதேசமயம் ஏதேனும் வீட்டை கடல் வழியாக கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்  ஏற்படுகையில், அந்த வீட்டின் அடிப்பகுதியில் மிதக்கும் உபகரணங்கள் இணைக்கப்பட்டு  அதனை படகு போன்று நீரின் மேலாக மிதக்க வைத்து கொண்டு செல்லப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right