அமெ­ரிக்­க வெள்ள அனர்த்தம் இர­சா­யனத் தொழிற்­சா­லையில் வெடிப்­புகள்

Published By: Robert

01 Sep, 2017 | 12:57 PM
image

அமெ­ரிக்­காவை தாக்­கிய ஹார்வி சூறா­வ­ளியால் ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தில் பாதிக்கப்­பட்­டுள்ள  ஹுஸ்டன் நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள இர­சா­யனத் தொழிற்­சா­லையில்  வெடிப்­புகள்  இடம்­பெற்­றுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

குரொஸ்பி பிராந்­தி­யத்­தி­லுள்ள அர்­கெமா  இர­சா­யனத் தொழிற்­சா­லையில் இரு வெடிப்­பு­க­ளை­ய­டுத்து கரும் புகை வெளிப்­பட்ட வண்ணம் உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. ஹார்வி சூறா­வ­ளி­யை­ய­டுத்து அந்த இர­சா­யனத் தொழிற்­சா­லை­யி­லுள்ள இர­சா­யன உள்­ள­டக்­கங்­களை குளிர்­விப்­ப­தற்கு தேவை­யான குளி­ரூட்டல் வசதி செயற்­படத் தவ­றி­ய­தை­ய­டுத்து  அதிக வெப்பம் கார­ண­மாக இந்த வெடிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 அந்தத் தொழிற்­சா­லையில் வெடிப்பு இடம்­பெ­று­வதைத் தவிர்க்க வேறு வழி கிடை­யாது என அந்த தொழிற்­சாலை நிர்­வாகம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து அந்தத் தொழிற்­சா­லையைச் சூழ்ந்து 1.5  மைல் தூரம் வரை­யுள்ள பிராந்­தி­யங்­களில் வசிக்கும் மக்கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வெளி­யேற்­றப்­பட்­டனர்.

 அந்தத் தளத்­தி­லி­ருந்த   தொழி­லா­ளர்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மையே வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

வெடிப்­பு­க­ளை­ய­டுத்து பாரிய தீ ஏற்­பட்டு பெரு­ம­ளவு நச்சுப் புகை வெளி­யேறும்  அபாயம் உள்­ளதால் மேற்­படி தொழிற்­சா­லைக்கு அருகிலுள்ள பிராந்தியங்களுக்கு மேலாக விமா­னங்கள் பறப்­ப­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அர்­கெமா இர­சா­யனத் தொழிற்­சா­லை­யி­லான உற்­பத்­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

 ஹார்வி புய­லை­ய­டுத்து இடம்­பெற்ற வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 33  பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அமெ­ரிக்க தேசிய கால­நிலை சேவைகள் கூறு­கி­றது.  அமெ­ரிக்க கென்­துக்கி மற்றும் லூஸி­யானா மாநி­லங்­களில்  3  நாட்­க­ளாக அடை மழை பெய்து வரு­கி­றது. அதே­ச­மயம் ஹுஸ்டன் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிர­தான எண்ணெய் விநி­யோகக் குழாய் மூடப்­பட்­டுள்­ளதால் அமெ­ரிக்க சக்­தி­வள விநி­யோ­கங்கள் கடும் பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் மீட்புப் பணி­யா­ளர்கள் வெள்­ளத்தில் சிக்­கி­யுள்­ள­வர்­களை கண்­டு­பி­டித்து மீட்கும் முக­மாக வீடு வீடாக தேடுதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47