ஜெனிவாவில் இலங்கையை இறுக்கிப்பிடிக்கவுள்ள சர்வதேசம்

Published By: Robert

01 Sep, 2017 | 01:04 PM
image

எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் விவ­காரம் சூடு­பி­டிக்­க­வுள்­ளது. சர்­வ­தேச நாடுகள் உள்­ளிட்ட அமைப்­புக்கள் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் தொடர்பில் கேள்வி எழுப்ப உள்­ள­நி­லை­யி­லேயே இலங்கை விவ­காரம் 37 ஆவது கூட்டத் தொடரில் சூடு­பி­டிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள கூட்டத் தொடரில் இலங்கை  தொடர்­பான விவ­காரம் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ரணை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன்  ஒரு அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார். 

அதே­போன்று ஜெனிவா பிரே­ரணை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது தொடர்பில் இலங்­கையும் அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்­க­வுள்­ளது. 

இந்­நி­லையில் சர்­வ­தேச அமைப்­புக்கள்  மற்றும் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்­பு­நா­டுகள் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கை­யிடம் பல்­வேறு  கேள்­வி­களை எழுப்பும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக ஜெனிவா பிரே­ரணை அமுல்­ப­டுத்­து­வதில் உள்ள தாமதம், பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான நீதிப் பொறி­முறை இது­வரை தயா­ரிக்­கப்­ப­டாமை, காணாமல் போனோர் விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து சர்­வ­தேசம் இலங்­கை­யிடம் கேள்வி எழுப்ப உள்­ளது. 

இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் இந்தக் கூட்டத் தொடரில் பங்­கேற்று பதி­ல­ளிக்க உள்­ளனர். முக்­கி­ய­மாக முதல் மூன்று நாட்­களில் இலங்கை அர­சாங்கம் சார்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் ஜெனிவா அமர்வில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். அதே­போன்று சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட அதி­கா­ரி­களும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வி­ருக்­கின்­றனர்.

இதன்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். இதன்­போது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­பதில் காணப்­படும் சவால்கள் தொடர்பில் விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டலாம் என  தெரி­ய­வ­ரு­கி­றது. 

2015 ஆம் ஆண்டு  ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையில் இலங்கை தொடர்­பாக ஒரு  பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2017 ஆம் ஆண்­டு­வரை  குறித்த பிரே­ரணை முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டா­ததால் 2019 ஆம் ஆண்டுவரை மேலதிக இரண்டுவருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.  

இந்த இரண்டு வருடகால அவகாசத்தில் இலங்கை எவ்வாறு பிரேரணையை  அமுல்படுத்துகிறது என்பது தொடர்பிலேயே 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  ஜெனிவாவில்  ஆராயப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56