அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர் துறப்பேன் 

Published By: Raam

26 Jan, 2016 | 08:11 AM
image

அமெ­ரிக்க வங்­கி­களில் எனது பெயரில் ஒரு டொல­ரேனும் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளதை நிரூ­பித்தால் "எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்­து­றப்பேன்" என சவால் விடுத்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ரணை வர­வி­ருப்­பதால் அதற்கு எதி­ராக பௌத்த குருமார் வீதி­களில் இறங்­கு­வதை தடுக்க குரு­மாரை கட்­டுப்­ப­டுத்தும் சட்­டத்தை அரசு நிறை­வேற்ற முயற்­சிக்­கின்­றது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. ரோஹித அபே குண­வர்­த­னவின் பாணந்­து­றை­யில் உள்ள அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே முன்னாள் ஜனா­தி­ப­தியும், குரு­ணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜ­பக் ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, 2015 ஜன­வரி 09 ஆம் திகதி வரை அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்­கான நிதி எம்­மிடம் இருந்­தது. நல்­லாட்­சி­யா­ளர்கள் எமது குடும்­பத்தை ஆசி­யா­வி­லேயே செல்­வந்தர் குடும்­ப­மாக வர்­ணிக்­கின்­றனர்.

அமெ­ரிக்க வங்­கி­களில் எனது பெயரில் பணம் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ள­தாக அர­ச­த­ரப்­பினர் குற்றம் சுமத்­து­கின்­றனர். அமெ­ரிக்க வங்­கியில் எனது பெயரில் ஒரு அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ள­தாக நிரூ­பித்தால் எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்­து­றப்பேன். முடிந்தால் அரசு தரப்­பினர் இதனை நிரூ­பித்துக் காட்ட வேண்டும் என்றும் சவால் விடு­கின்றேன்.

எமது நாட்­டுக்கு எதி­ராக ஹைபிறிட் நீதி­மன்­றம் விசா­ரணை (சர்­வ­தேச நீதி­மன்ற) நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வா­றான நிலையில் பெளத்த குரு­மார்கள் இதனை எதிர்த்து வீதியில் இறங்­கு­வார்கள். இதனை தடுப்­ப­தற்­கா­கவே பெளத்த குரு­மாரை கட்­டுப்­படுத்தும் சட்­டத்தை கொண்டு வரு­வ­தற்கு அரசு துடிப்­பாக முயற்­சிக்­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு விசா­ரணை இடம்­பெ­றாது என ஜனா­தி­பதி கூறு­கின்­றார். இது இடம்­பெறும் என அர­சுக்குள் வேறொரு கூட்டம் தெரி­விக்­கின்­றது. எனவே இவ்­வி­ட­யத்தில் உண்­மையைக் கூறு­வது யார்? பொய் கூறு­வது யார்? உண்மை தெரி­யாமல் உள்­ளது.

மது­வுக்கு முற்­றுப்­புள்ளி வைப்போம் எனக் கூறும் அர­சாங்கம் "பியர்" மது­பானம் தயா­ரிப்­ப­தற்­காக குறைந்த விலையில் நெல்லை விற்­பனை செய்­கின்­றது. என்ன நடக்­கின்­றது என்­பது ஜனா­தி­ப­திக்கு தெரி­ய­வில்லை. இதனால் அரி­சியின் விலை இன்று உயர்ந்­துள்­ளது.

நா ன் நிர்­மா­ணித்த வீதிகளில் பயணித்துக் கொண்டு என்னை விமர்சிக்கின்றனர். இன்று கொழும்பு நகரில் துர்நாற்றம் இல் லை. "சுத்தமான மணற்தரையில் மக்கள் உறங்குகின்றார்களா என்பதை மக்களிடமே கேட்க வேண்டும்" என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38