மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய உயர்மட்ட கலந்துரையாடலையடுத்து தற்காலிகமான தீர்வொன்று திருப்பெரும்துறை குப்பை பிரச்சினைக்கு  எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின்  மட்டக்களப்பு  விஜயத்தை அடுத்து  இந்த உயர்மட் ட இரகசிய கலந்துரையாடல் இடம்பெறுள்ளது.
இதன் பிரகாரம் தற்காலிகமாக குப்பைகளை ஏறாவூர் பிரதேச சபை அல்லது வவுணதீவு பிரதேச சபைக்கு உட்பட் ட பகுதிகளில் தற்காலிகமாக  கொண்டு சென்று கொட்டுவதற்கு  முடிவெடுக்கப்பட்டுள்ளது .
ஆகவே  இன்றில் இருந்து மாநகரசபைக்கு முதலமைச்சர் காரியாலயத்தில் இருந்து சகல உதவிகளையும் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரகசிய கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களை உட்செல்ல  அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.