யாழ்ப்பாணம், அரியாலை, புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை யாழ்.புங்கன்குளம் ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதுடன் ரயிலில் பயணித்தவர் ரயில் இருந்து கீழே இறங்க முற்பட்டபோதே தவறுதலாக கீழே விழுந்து ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் ஆசிரியையான மீராவின் கணவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான 53 வயதுடைய அருள்நேசன் என்பவரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ் வைத்தியசாலையில் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.