தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த மோதலில் தொடர்புடைய  13 மாணவர்கள் கல்விநடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்த நிலையில்  அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சில மாணவர்கள் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று காலை வைத்தியாசாலையை  விட்டு வெளியேறியுள்ளனர்.