ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை லசித் மலிங்க கடந்துள்ளார்.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து லசித் மாலிங்க 300 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லைக் கடந்தார்.

203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 300 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளைக் கடந்த இலங்கையர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை மலிங்க பிடித்துக்கொண்டார்.

இதேவேளை, 30 டெஸ்ட் போட்டிகளலில் விளையாடியுள்ள லசித் மாலிங்க  101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன்  67 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்க 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.