இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி இலங்கை அணி வீரர் மாலிங்கவுக்கு 300 விக்கெட் என்ற மைல்கல்லை கடக்கும் போட்டியாகவும்  இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியில் 300 ஆவது போட்டியாகவும் அமைந்துள்ளது.

இலங்கை அணிக்கெதிரான  4  ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை அணியில் டில்சான் முனவீரவும் மிலிந்த புஷ்பகுமாரவும் தமது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர். அத்துடன் வனிது ஹசரங்கவும் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாடுகின்றனர்.

இந்திய அணி சார்பாக புதுமுக வீரர் சார்துல் தாகூர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டி லசித் மாலிங்கவுக்கு முக்கியமானதொரு போட்டியாக அமைந்துள்ளது. அவர்  ஒருநாள் போட்டிகளில் 299 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் இப் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றார்.

1000 பொலிஸார் பாதுகாப்பு கடடைமயிலீடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சி.சி.ரி. கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்குடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.