தேசிய காப்புறுதி தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபாலுறை, தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகரவினால் இன்று முற்பகல் ஜனாதிபதியின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. 

காப்புறுதி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க செப்டெம்பர் 01ஆம் திகதியை தேசிய காப்புறுதி தினமாக பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை காப்புறுதி சபையின் தலைவி இந்ராணி சுகததாச மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.