ப்ளு வேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை பொலிஸார் கைதுசெய்துள்னர்.

குறித்த ரஷ்ய சிறுமி தான், உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மொஸ்கோ நகருக்கு அருகே 21 வயது இளைஞர் ஒருவரையும் இச் சம்பவத்துடன் தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியும் ஆர‌ம்பத்தில் ப்ளுவேல் விளையாடியவர் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த ப்ளுவேல் தற்கொலை விளையாட்டு இணையவழி ஊடாக ரஷ்யாவில் உள்ள ஒரு குழு மூலம் நெறிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன் அட்மினாகவே குறித்த 17 வயதுடைய ரஷ்ய சிறுமி செயல்படுகின்றார்.

குறித்த ப்ளுவேல் விளையாட்டை விளையாடிய 10 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

குறித்த ப்ளுவேல் விளையாட்டில் இலக்கை அடைவதற்கான 50  செல்முறைகள் உள்ளன அதன் இறுதிக்கட்ட இலக்கை அடைவதற்கான செல்முறையாக தற்கொலையாகும்.