தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு ஆளுநரே காரணம்

Published By: Robert

31 Aug, 2017 | 12:57 PM
image

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு ஆளுநரே காரணம் என்று முன்னாள் சபாநாயகரான சேடப்பட்டி முத்தையா குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்றும் 19 எம்.எல்.ஏ.க்கள், கவர்னரை சந்தித்து நேரில் மனு அளித்தனர். ஆனால் இது உள்கட்சி விவகாரம். எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருப்பது விதண்டாவாதமாக உள்ளது. தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கு ஆளுநர் வித்யாசாகர்ராவ் தான் காரணம். 

பல்வேறு மாநிலங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநில ஆளுநர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசியல் சட்ட விதிமுறைகளையும் தாண்டி மத்திய பா.ஜனதா அரசின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு நடப்பது போல் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் மீது அதே கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லை என்று கூறி ஆதரவை வாபஸ் பெற்றார். உடனே ஆளுநர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு உத்தரவிட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு என்.டி. ராமராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். இது போன்று பல்வேறு முன் உதாரணங்கள் மற்றும் அரசியல் சட்ட நெறிமுறைகள் உள்ளன. இவற்றை எல்லாம் ஆளுநர் பொறுப்புடன் ஆய்வு செய்து தமிழக அரசியலில் நிலவி வரும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17