உயர் மட்ட கிரிக்கெட் கழகங்களுக்கு மைதான பராமரிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Published By: Digital Desk 7

31 Aug, 2017 | 11:46 AM
image

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உயர் மட்டத்திலுள்ள 10 கிரிக்கெட் கழகங்களுக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான மைதானத்தை மேம்படுத்தும் மற்றும் பராமரிக்கும் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.

சிறிய ரக கை ட்ராக்டர்கள், ஆடுகளத்தை வெட்டி பதப்படுத்தும் உபகரணங்கள், எல்லைக் கயிறுகள் மற்றும் பல மைதான பராமரிப்பு உபகரணங்கள் போன்றவையே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கழகம், ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம், நண்டூஸ்கிரிப்ட் கிரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் மற்றும் தடகள கிரிக்கெட் கழகம், சில்லா மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், மோர்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு கொல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இராணுவ விளையாட்டு கழகம், பர்கர் பொழுது போக்கு கழகம், கடற்படை விளையாட்டுக் கழகம் பொலிஸ் ஸ்போர்ட்ஸ் கழகம், விமானப்படை விளையாட்டு கழகம், மற்றும் பாணந்துறை விளையாட்டு கழகம் ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மட்ட விளையாட்டு கழகங்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்த உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.

பாடசாலை கழகங்கள் மாவட்டம் மற்றும் மாகாணங்களில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரூபா செலவில் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41