மாலிங்க தலைமையில் இளம் சிங்கங்கள் ; இன்றைய போட்டியிலாவது வெற்றிபெறுமா என ஏங்கும் ரசிகர்கள் ?

Published By: Priyatharshan

31 Aug, 2017 | 10:42 AM
image

இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்­விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று இலங்கை அணியின் புதிய தலைவர் லசித் மாலிங்க தெரி­வித்துள்ளார்.

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கில் ஏற்­க­னவே இந்­தியா கைப்­பற்­றி­யுள்ள நிலையில் இன்று நான்­கா­வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா? அல்லது மாலிங்க தலைமையிலான இளம் இலங்கை அணி வெற்றி பெற்று தமக்கு விருந்தளிக்குமாவென இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஏங்குகின்றனர்.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளில் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்கள் தம்புள்ளையில் இடம்பெற்ற போட்டியிலும் கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற போட்டியிலும் தமது வெறுப்பை காண்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய போட்டி இலங்கை ரசிகர்களின் ஏக்கங்களின் மத்தியிலும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்­டி­யிலும் இந்திய அணி வென்று 4-0 என்ற கணக்கில் முன்­னிலை பெறும் ஆர்­வத்­துடன் இந்­திய அணி உள்­ளது. ஆனாலும் லசித் மாலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி எஞ்­சி­யுள்ள இரண்டு போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்று 2019 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ணத்­திற்கு நேர­டி­யாக தகு­தி­பெற வேண்டும் என்ற முடிவில் இருக்­கி­றது.

இந்­திய அணி தொடரை வென்று விட்­டதால் விளை­யா­டாத வீரர்­க­ளுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்­கப்­படும் என்று இந்­திய அணித் தலைவர் கோலி ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். அந்­த­வ­கையில் இந்திய அணியில் இன்­றைய போட்­ டியில் புதுமுக வீரர்கள் கள­மி­றங்க வாய்ப்­புள்­ளது. 

உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி. விதித்த தடையினால் தலைவர்  பொறுப்பை ஏற்ற சாமர கபுகெதரவும் காயத்திற்குள்ளான நிலையில் தலைவர் பதவி மலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே­வேளை சாமர கபு­கெ­தர, குண­தி­லக்க, சந்­திமால் ஆகியோர் காயம் கார­ண­மாக வில­கி­யுள்­ளனர். அதி­ரடி வீரர் டில்ஷான் முன­வீர அணிக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். இன்றைய களநிலையை ஆராய்ந்தே ஆடும் பதினொருவர் கொண்ட இலங்கை அணி தெரிவு செய்யப்படவுள்ளது.

அநேகமாக திரிமான்னவும் டில்ஷான் முனவீரவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது.

இன்றையய போட்டியை பொறுத்திருந்து பார்ப்போம் லசித் மாலிங்க தனது அனுபவத்தை பயன்படுத்திய இளம் வீரர்களை வழிப்படுத்தி, தொடர் தோல்வியால் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்களுக்கு விருந்தளிப்பாராவென ? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35