பாரிய பனிப் பொழிவு : 50 பேர் உயிரிழப்பு

Published By: Robert

25 Jan, 2016 | 04:50 PM
image

கிழக்கு ஆசியாவெங்கும் இடம்பெற்ற பாரிய பனிப் பொழிவால் பலர் உயிரிழந்துள்ளதுடன் அந்தப் பிராந்தியத்திலான இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பனிப் பொழிவால் தாய்வானில் மட்டும் 50 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

தென் கொரியாவில் பனனிப்பொழிவால் விமானசேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் குறைந்தது 60,000 சுற்றுலா பயணிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

கடும் பனிப் பொழிவால் கொரிய சுற்றுலா தீவான ஜெயுவிலுள்ள விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் ஹொங்கொங், தென் சீனா மற்றும் ஜப்பானிலும் கடும் பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளது.

தாய்வானில் உயிரிழந்தவர்களில் அநேகர் அந்நாட்டின் வடக்கு பிராந்திய நகர்களான தாய்பி, தவோயுவான் மற்றும் தென் நகரான கவோஹ்ஸியங் ஆகிய பிராந்தியங்களில் வசிக்கும் வயோதிபர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாய்வானின் வட பகுதியில் வழமைக்கு மாறான 4 பாகை செல்சியஸ் தாழ்ந்த வெப்பநிலை நிலவியுள்ளது.

தாய்வானின் தலைநகரில் உயிரிழந்தவர்களில் பலர் இருதய மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிராந்திய அதிகாரிகள் வயோதிபர்களை குளிரில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

தென் கொரியாவில் 500 க்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஹொங்கொங்கில் 3 பாகை செல்சியஸ் அளவான வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அந்தப் பிராந்தியம் சுமார் 60 வருடங்களில் எதிர்கொண்ட மிகவும் தாழ்ந்த வெப்பநிலையாகும்.

ஜப்பானில் இந்தப் பனிப்பொழிவால் 600 க்கு மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் இரத்துச் செய்யபட்டன.

அந்நாட்டில் மேற்படி பனிப் பொழிவால் குறைந்தது 5 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தென் சீனாவில் குவாங்ஸொயு மற்றும் ஷென்ஸென் பிராந்தியங்களில் வழமைக்கு மாறான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது. அதேசமயம் அந்நாட்டின் ஒகினாவா பிராந்தியத்தில் முதல் தடவையாக பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய கிழக்கு ஆசிய நாடுகளிலும் வெப்பநிலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வியட்நாமில் ஹனோய் பிராந்தியத்தில் வெப்பநிலை 6 பாகை செல்சியஸாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது அந்தப் பிராந்தியம் கடந்த இரு தசாப்த காலத்தில் எதிர்கொண்ட மிகவும் தாழ்ந்த வெப்பநிலையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47