ஜோடி­யொன்று  கர்ப்­பிணிப் பெண்­ணொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து குழந்­தையைத் திரு­டு­வ­தற்­காக அவரை படு­கொலை செய்து ஆற்றில் வீசிய அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க வட கரோ­லினா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

8 மாத கர்ப்­பி­ணி­யான சவன்னா லாபு­ரொன்­டெயின் கிரேவின்ட் (22 வயது)  கடந்த 19  ஆம் திகதி  காணாமல் போயி­ருந்தார். இத­னை­ ய­டுத்து அவரைத் தேடும் நட­வ­டிக்கை பரந்­த­ளவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. மேற்­படி தேடும் நட­வ­டிக்­கையில் மோப்­ப­நாய்கள் சகி தம் நூற்­றுக்­க­ணக்­கான தொண்­டர்­களும்  சட்ட அமு­லாக்க அதி­கா­ரி­களும் பங்­கேற்­றி­ருந்­த னர்.

இந்­நி­லையில் சவன்­னாவின் சடலம்  பிளாஸ் டிக் பையால் சுற்­றப்­பட்ட நிலையில் அவர் காணாமல் போன­தற்கு 8  நாட்கள் கழித்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆறொன்றில்  மரக்­குற்­றி­யொன்றில் சிக்­கிய நிலையில் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து மேற்­படி படு­கொ­லையை மேற்­கொண்ட சந்­தே­கத்தில்  32  வய­தான வில்­லியம் ஹோஹ்ன் மற்றும் 38  வய­தான புறூக் குறூவ்ஸ் ஆகியோர்  கைது­செய்­யப்­பட்­டனர்.

அவர்­க­ளது வீட்­டிற்கு விஜயம் செய்­தி­ருந்த நிலை­யி­லேயே சவன்னா காணா­மல்­போ­யி­ருந் தார்.

அத்­துடன் அந்த ஜோடியின் பரா­ம­ரிப்­பி­லி­ருந்த  சவன்­னா­வி­னது   பச்­சிளம் பெண் குழந்­தை­  தொடர்­பிலும்  பொலி­ஸாருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது. 

ஆரம்­பத்தில் அந்தக் குழந்­தையை தமது குழந்தை என வாதிட்ட  புறூக் குறூவ்ஸ் பின்னர் சவன்னா காண­ாமல்­போ­னதாக கூறப்படும் தினத்திற்கு இரு நாட்கள் கழித்து  தமது வீட்டிற்கு வந்து தனது குழந்­தையை தம்­மிடம் ஒப்­ப­டைத்து விட்டுச் சென்­றி­ருந்­தாக கூறினார்.

அவர்­க­ளிடம் மேற்­கொண்ட  தீவிர விசா­ர­ணை­களின் போது  சவன்னாவின் பிறக்காத குழந் தையைத் திருடி அதனை தமது குழந்தையாக உரிமை கோரவே அவரை படுகொலை செய்ததாக புறூக் குறூவ்ஸ் ஒப்புக்கொண் டுள்ளார்.