ஹொங்­கொங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள ஆசிய அணிக்கு எழுவர் றக்பி தொடரின் முதலாம் கட்­ட­மான ஹொங் கொங் அணிக்கு எழுவர் றக்பி போட்­டியில் கலந்­து­கொள்ளும் பொருட்டு இலங்கை றக்பி அணி­யினர் ஹொங் கொங் சென்­ற­டைந்­தனர்.

இப் போட்­டியில் இலங்கை உட்­பட எட்டு நாடுகள் இரண்டு குழுக்­களில் போட்­டி­யி­டு­கின்­றன.

ஜப்பான், தென் கொரியா, சைனீஸ் தாய்ப்பே ஆகிய நாடு­க­ளுடன் இலங்கை குழு 'பி'யில் இடம்­பெ­று­கின்­றது.

இப் போட்டி தொடர்­பாக கருத்து வெளி­யிட்ட இலங்கை அணித் தலைவர் சுதர்­ஷன முத்­து­தான்­திரி, ‘‘குழு 'பி'யில் இடம்­பெறும் ஜப்பான் அணிதான் எமக்கு மிகவும் சவால்­மிக்­க­தாக உள்­ளது. 

இப் போட்டித் தொடர் உலக அணிக்கு எழுவர் றக்­பிக்­கான தகு­திகாண் சுற்­றாக நடை­பெ­று­வதால் ஜப்பான் முழுப்­ப­லத்­துடன் கள­மி­றங்­க­வுள்­ளது. 

இது எமக்கு சற்று பாத­கத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும் என கரு­து­கின்றேன். 

எனினும் எமது அணி­யினர் முழு­வீச்­சுடன் விளை­யாடி ஜப்­பானை வெற்­றி­கொள்ள முயற்சி செய்யும். 

ஆனால் அது இல­கு­வாக அமை­யப்­போ­வ­தில்லை. எனினும் தென் கொரியா, சைனீஸ் தாய்ப்பே ஆகிய நாடு­க­ளு­ட­னான போட்­டி­களில் எம்மால் வெற்­றி­பெற முடியும் என நம்­பு­கின்றேன்’’ என்றார்.

இலங்கை தனது ஆரம்பப் போட்­டியில் ஜப்­பானை நம் நாட்டு நேரப்­படி முற்­பகல் 11.00 மணிக்கு சந்­திக்­க­வுள்­ளது.

குழு ஏயில் போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வரவேற்பு நாடான ஹொங் கொங், பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.