நவீனமயமாக்கப்படவுள்ள ஹட்டன் நகரம்

Published By: Robert

25 Jan, 2016 | 04:42 PM
image

ஹட்டன் நகரம் விரைவில் நவீனமயப்படுத்தப்படும். வெளி இடங்களுக்கு சென்று தங்களின் பணங்களை வீண்விரயோகம் செய்யும் மக்கள் ஹட்டன் நகரத்தில் சொகுசு வாழ்க்கையினை முன்னெடுக்கும் வகையில் எழில் கொஞ்சும் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு மக்களின் பூரண ஆதரவு வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இன்று ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் கூறப்பட்ட ஹட்டன் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறண்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் வர்த்தகர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகள், ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள், ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையினர் ஹட்டன் நகரத்தின் அபிவிருத்தி தொடர்பான இந்நவீன நகரத்தின் மாதிரி வரைபடத்தினை ஒளி திரை காட்சியாக மக்களின் பார்வைக்கு முன்வைத்தனர்.

இந்த ஒளி திரையை பார்வையிட்டதன் பின் அமைச்சர் திகாம்பரம் மேலும் உரை நிகழ்த்துகையில்....

ஹட்டன் நகரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஒளி திரையின் மூலம் அபிவிருத்தி திட்டங்கள் வெளிக்காட்டப்பட்டது. இதற்கு நகர அபிவிருத்தி அமைச்சின் உதவியின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஹட்டன் நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கான மாதிரி வரைபடங்கள் வெளிக்காட்டினாலும் மக்களின் தேவைக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

ஹட்டன் நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி இலகுவில் தமது தேவைகளையும், விருப்பங்களையும் நிவர்த்தி செய்யும் முகமாக நவீன வசதிகளை கொண்ட சந்தை தொகுதி, நவீன ஆடை விற்பனை நிலையம், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, மிகவும் பெரியளவிலான நீர்தேக்கம், வங்கி நிலையங்கள், உயர் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நட்சத்திர ஹேட்டல்கள், ஹட்டன் பஸ் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், புதிய வீடமைப்பு திட்டங்கள் போன்றவை நவீனமயமாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. 

இவற்றனை அமைப்பதன் மூலம் மக்கள் வெளி இடங்களுக்குச் சென்று பணத்தினையும், நேரத்தினையும் மிச்சப்படுத்தி ஹட்டன் நகரத்திலேயே தமது தேவைகளையும், விருப்பங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்பதனை கருத்திற் கொண்டு நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் காரணமாகவே மக்களின் பூரண ஆதரவு வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04