இலங்கை அணி முன்­ன­தாக அடைந்த தோல்­விகள் குறித்தும் முன்னாள் தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று புதிய அணித் தலைவர் லசித் மலிங்க தெரி­வித்தார்.

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–-0 என்ற கணக்கில் ஏற்­க­னவே இந்­தியா கைப்­பற்­றி­யுள்ள நிலையில் இன்று நான்­கா­வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா? என்று எதிர்­நோக்­கு­கின்­றனர். இந்தப் போட்­டி­யிலும் வென்று 4-–0 என்ற கணக்கில் முன்­னிலை பெறும் ஆர்­வத்­துடன் இந்­திய அணி உள்­ளது. 

ஆனாலும் லசித் மலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி எஞ்­சி­யுள்ள இரண்டு போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்று 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ணத்­திற்கு நேர­டி­யாக தகு­தி­பெற வேண்டும் என்ற முடிவில் இருக்­கி­றது.

இந்­திய அணி தொடரை வென்று விட்­டதால் விளை­யா­டாத வீரர்­க­ளுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்­கப்­படும் என்று இந்­திய அணித் தலைவர் கோஹ்லி ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். 

அந்­த­வ­கையில் இன்­றைய போட்­ டியில் புது வீரர்கள் கள­மி­றங்க வாய்ப்­புள்­ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்­ததால் இலங்கை வீரர்கள் நெருக்­க­டியில் உள்­ளனர். 

ஆனாலும் கடைசி இரண்டு போட்­டி­களில் இலங்கை போரா­டியே வீழ்ந்­தது. இதனால் இன்­றைய போட்­டியில் வெற்றி பெற கடு­மை­யாக போராடும். 

உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி. விதித்த தடையினால் தலைவர்  பொறுப்பை ஏற்ற சாமர கபுகெதரவும் காயத்திற்குள்ளான நிலையில் தலைவர் பதவி மலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடை­பெ­ற­வுள்ள போட்டி குறித்து நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் லசித் மலிங்க குறிப்­பி­டு­கையில், 

முந்­தைய தோல்­வி­களும் முன்னாள் அணித் தலை­வர்கள் குறித்தும் எமக்கு எந்த சிந்­த­னையும் இல்லை. எதிர்­வரும் போட்­டி­களில் நாம் எப்­படி செயற்­பட வேண்டும் என்­பதே எமது அணியின் குறிக்­கோ­ளாக உள்­ளது.

அதே­வேளை சாமர கபு­கெ­தர, குண­தி­லக்க, சந்­திமால் ஆகியோர் காயம் கார­ண­மாக வில­கி­யுள்­ளனர். அதி­ரடி வீரர் டில்ஷான் முன­வீர அணிக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். நாளைய களநிலையை ஆராய்ந்தே ஆடும் பதினொருவர் அணியை நாம் தேர்வுசெய்வோம். அநேகமாக திரிமான்னவும் டில்ஷான் முனவீரவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது என்றார்.